-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் 13ம் கட்டை சந்தியில் இராணுவத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனமும் கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது திருகோணமலையில் இருந்து வந்த காரும் தம்பலகாமம் 13ம் கட்டை சந்தி வலைவில் திருப்பிய இராணுவத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



