இராஜினாமா செய்தார் கோட்டாபய ராஜபக்ஷ : உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜினாமா உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இதனை இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அறிவித்துள்ளார்.
மாலைதீவின் ஊடாக சிங்கப்பூரை சென்றடைந்த கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.
