
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அரச நிறுவன பதவிகளிலிருந்து விலகத் தீர்மானம்
கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தமக்குக் கீழுள்ள அரச நிறுவனங்களில் வகித்த பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அறிவிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம், நாரா, சீனோர், நோர்தன் சீ ஆகிய நிறுவனங்களில் வகித்த பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
