இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமனம்

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமனம்

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.