இரவோடிரவாக உடைக்கப்பட்ட ஹற்றன் நஷனல் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம்!

-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள ஹற்றன் தேசிய  வங்கியின் (Hatton National Bank) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் நேற்று திங்கட்கிழமை இரவு  உடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலையிலேயே குறித்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அமைந்துள்ள பின்புற அறையினுள் காணப்பட்ட இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு, உள் நுழைந்து பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பணம் கொள்ளையிடவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீசீடிவி கமராவில் பதியப்பட்ட சாட்சியங்களை ஆதாரமாக வைத்து  நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்