
இரவு 9 மணிக்கு முன் தொலைக்காட்சியில் துரித உணவு விளம்பரங்களுக்கு தடை!
சிறுவர்களின் வயதை மீறிய உடல் பருமனை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இரவு 9 மணிக்கு முன் தொலைக்காட்சியில் துரித உணவு விளம்பரங்களை இங்கிலாந்து அரசு தடை செய்துள்ளது.
கொழுப்பு, சீனி மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை, சிறுவர்கள் உண்ணுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தொலைக்காட்சி விளம்பரங்கள், இந்த துரித உணவுகளை அதிகம் சந்தைப்படுத்த உதவுகின்றன.
ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ள குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தத்தைக் குறைக்க, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், என தி கார்டியன் செய்தி தெரிவித்துள்ளது.
