இரவு விடுதியில் தீ விபத்து : 14 பேர் உயிரிழப்பு

வியட்நாமில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 13 பேர் தீயில் காயம் அடைந்தனர், தீ விபத்து ஏற்படும் போது அங்கு சுமார் 40 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை, என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.