இரவு முழுவதும் தென்னை மரத்தில் அமர்ந்திருந்த நபரை மீட்ட விமானபடையினர்!

விமானப்படையினாரால் பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக அனுராதபுரத்தின் அவுகன பகுதியில் கலா வெவா வெள்ளப்பெருக்க்கில் நேற்று வியாழக்கிழமை மாலை முதல் தென்னை மரத்தின் மேல் சிக்கித் தவித்த ஒருவரை , இன்று வெள்ளிக்கிழமை ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தின் 7வது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையின் மீட்பு குழுவினர் மீட்டனர்.

மேலும் மன்னம்பிட்டிய பாலத்தில் சிக்கி 06 பேரையும் மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டனர்.