
இரவு மழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
