இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா?

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா?

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா?

💦தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதுதான்.. ஆனால் அதை எப்போது குடிக்க வேண்டும். எப்போது குடிக்கக்கூடாது என்ற வரையறை உள்ளது.. ஆனால் தாகம் ஏற்பட்டால் அது பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும் உடனே தண்ணீர் குடிப்பதுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

💦இரவு தூங்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இக்கட்டுரையில் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள், தீமைகள் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாம்.

நன்மைகள்

🎈மனநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு நல்ல தூக்கம் முக்கியமானது என்பதால், படுக்கைக்கு முன் (மிதமாக) தண்ணீர் குடிப்பது உங்களுக்கு நன்றாக தூங்க உதவும், இது காலையில் மிகவும் நேர்மறையான மனநிலைக்கு வழிவகுக்கும்.

🎈பகலில் உடற்பயிற்சி செய்வது மற்றும் பல்வேறு வகையான வேலைகள் உங்கள் தசைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடிப்பது தசைகளுக்கு நன்மை தரும்.

🎈உறங்கச் செல்வதற்கு முன் ஒரு கப் சூடான மூலிகை தேநீர் அல்லது ஒரு கிளாஸ் இளநீர் குடிப்பது உங்கள் உடலில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். இந்த பழக்கம் உங்கள் உடலுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்று சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது உடலை தளர்வாக்கி, தூக்கத்தை தூண்டும்.

🎈மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இரவு தூங்குவதற்கு முன் ஒருவர் தண்ணீர் குடிப்பதால், அது நாள் முழுவதும் எதிர்கொண்ட அழுத்தத்தைப் போக்கும். மேலும், இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

தீமைகள்

🎈படுக்கைக்கு முன் அதிக தண்ணீர் குடிப்பதன் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்று, இரவில் சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது. இது கணிசமாக தூக்கத்தை சீர்குலைத்து, தூக்கத்தின் தரத்தை குறைக்கும்.

🎈இரவில் அதிகமாக தண்ணீர் குடித்துவிட்டு துங்க போனால், இரவெல்லாம் சிறுநீர்கழிக்க நடந்துகொண்டே இருக்க நேரிடும். இப்படி இரவுத் தூக்கம் பாதிக்கப்பட்டால் உடலில் எந்த பழுது நீக்க வேலைகளும் நடக்காது. உடல் களைப்பு, பகலில் தூங்கி வழிதல், கண் எரிச்சல், கவனக்குறைவு , பசியின்மை போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

🎈தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதிகமாக தண்ணீர் குடித்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக தண்ணீர் குடிப்பதால் சுவாசக்குழாய் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, தூக்கத்தின் போது சுவாசிப்பது கடினமாகிவிடும்.

🎈இரவில் நச்சு நீக்கம் செய்யும். மறுநாள் காலை மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது. எனவே தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதை தவிருங்கள். அப்படியே குடிக்க வேண்டுமென்றால் வெதுவெதுப்பான தண்ணீர் அதுவும் தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிப்பது மிகவும் நல்லது.

🎈தண்ணீர் குடித்தவுடன் படுத்துக் கொண்டால், வயிற்று அமிலம் மீண்டும் உணவுக்குழாயில் பாயும் அபாயம் அதிகம். அதனால் தாகம் எடுக்காமல் தண்னீர் குடிப்பது என்பது நல்லதல்ல.

இரவு தூங்கும் முன் நீர் குடிப்பது நல்லதா?, கெட்டதா?

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்