இரவில் தீப்பந்தங்களுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்

பாணந்துறை – ஹொரன வீதியில் ஒன்று திரண்ட மக்கள் நேற்றையதினம் சனிக்கிழமை இரவு மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்ட இயக்கத்தினரின் ஏற்பாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன், தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக கண்டியிலும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.