இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

இரத்மலானை ரயில் நிலைய வீதி பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றில் பிரவேசித்த இனந்தெரியாத சிலர், வீட்டிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.