இரத்த சிகப்பு நிறத்தில் நாளைய சந்திரகிரகணம்

பூமியின் நிழலில் முழு நிலவு மறந்து விலகும் நிகழ்வு தான் முழு சந்திர கிரகணம் எனப்படுகிறது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போதுதான் சந்திர கிரகணம் நிகழும்.

முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் செல்வது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, அது சிவப்பு நிறத்தைப் பெற்று இரத்த சிவப்பு தோற்றத்தை நாம் காணும் அரிய வாய்ப்பை நாளை செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி நாம் காணக் கூடியதாக இருக்கும்.

முழு சந்திர கிரகணம் தெரியும் நாடுகள்

வடக்கிழக்கு ஐரோப்பா , ஆசியா ,ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும்.

இந்த சந்திரகிரகணம் இந்திய இலங்கை நேரப்படி கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்படுகிறது. மேகமூட்டம் இல்லாமல் இருந்தால்; 5.11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளது.