
இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
-மூதூர் நிருபர்-
திருகோணமலை –கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கூடு கோபுரத்திற்கு அருகாமையில் இன்று புதன்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கோதுமை மா ஏற்றி கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனமும், கொழும்பிலிருந்து வாகன உதிரிப்பாகங்களை ஏற்றி கந்தளாய் 92வது கட்டைப்பகுதிக்குச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
குறித்த வேன் சாரதியும், வேனில் துணைக்கு வந்த மற்றொருவரும் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோதுமை மா ஏற்றி சென்ற வாகன சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும், வேன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது .
மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
