இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை சந்திப் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

யாழ்ப்பாணம்-கொடிகாமம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து மீசாலை சந்திப் பகுதியில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த வேளையில் அதே திசையில் வந்த இ.போ.ச பேருந்து மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.

இருப்பினும் மேற்படி விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் இரண்டு பேருந்துகளும் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்