இரண்டு நாட்களுக்கு பெற்றோல் இல்லை
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது, எனவே வரிசையில் காத்திருக்க வேண்டாம், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று புதன்கிழமை பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்
அதன்படி, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம், என பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், தற்போது நாடு முழுவதும் டீசல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
