இரண்டு நாட்களுக்கு சில ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

களனிவெளி ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படவிருந்த ஐந்து ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 08.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி இயக்கப்படவிருந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பாதுக்க வரை பிற்பகல் 1.55 க்கு இயக்கப்படும் மெதுவான ரயில்,

கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளைக்கு பிற்பகல் 4.00 மணிக்கு இயக்கப்படும் அரைகடுகதி ரயில் ,

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு நண்பகல் 12.25 க்கு இயக்கப்படும் மெதுவான ரயில் ,

பாதுக்கயில் இருந்து கொழும்பு கோட்டைக்கு பிற்பகல் 3.45 க்கு இயக்கப்படும் அரைகடுகதி ரயில் என்பன தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.