
இரண்டு நாட்களாக காய்ச்சல் : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 14 மாத குழந்தை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரி – இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இரண்டு நாட்களாக கடுமையான காய்ச்சாலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை, நேற்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பி.ப 1 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
