இரண்டு தலைகள் மோதி இரு சிறுவர்கள் பலி

ஸ்ரீபுர திஸ்ஸபுர பகுதியில் கால்வாய்க்கு அருகில் இருந்த மரமொன்றில் ஏறி, கால்வாய்க்குள் குதித்துக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை மாலை  உயிரிழந்துள்ளனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 12 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவரே மரணமடைந்துள்ளனர்.

மரத்திலிருந்து அவ்விருவரும் ஒரே நேரத்தில் பாய்ந்த போது, இருவரின் தலைகளும் மோதியதில், கால்வாய்க்குள் விழுந்து மீண்டெழ முடியாத நிலையில் அவ்விருவரும் மரணமடைந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்