இரண்டு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

பளை சோரம்பற்டு பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா பெறுமதியான 95 கிலோ, 385 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கேரள கஞ்சாவை காரில் கடத்தி சென்ற வேளையில் பொலிஸாரின் கட்டளைகளை மீறி குறித்த கார் பயணித்துள்ளது. அதனை பொலிஸார் துரத்தி செல்லும் வேளையில் பளை சோரம்பற்டு என்ற இடத்தில் பெண்ணொருவரின் வீட்டு முற்றத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த காரில் கடத்துவதற்காக தயார் செய்யப்பட்ட கேரள கஞ்சா 16 பார்சல்கள் காணப்பட்டன. சந்தேகநபருக்கு சொந்தமான வீட்டை சோதனையிட்ட போது, ​​படுக்கையறையில் 20 கேரள கஞ்சா பார்சல்களும், கழிவறையில் மேலும் 16 பார்சல்களும் கண்டுபிடிக்கப்பட்டு, சந்தேக நபருடன் பளை பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்