இரண்டு கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ மற்றும் களனி, வனவாசல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.