
இரண்டு குழந்தைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்பு
மஸ்கெலியா கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போன நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
ஹப்புகஸ்தனை தோட்டத்தைச் சேர்ந்த மூக்கையா கனகேஸ்வரன் இரண்டு குழந்தைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில்,
குறித்த நபர் கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து கென்யோன் நீர் தேக்கத்திற்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த நபரின் சடலம் கிடைக்காத நிலையில் தேடுதல் நடவடிக்கை கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று குறித்த நீர் தேக்கத்தில் காணாமல் போனவருடைய சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் இன்று சனிக்கிழமை நண்பகல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
