இரண்டு இரவுக்கு மட்டும் தான் உல்லாசம் : சிக்கிய பெண் அதிர்ச்சி தகவல்
ஆறு திருமணங்கள் செய்து மணமகன்களிடம் இருந்து இலட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய பெண் ஏழாவது திருமணத்தின் போது வசமாக சிக்கியதை அடுத்து பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டார்.
இந்தியா – நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள வெங்கரை அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 35 ).,வருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (வயது 26 ) என்பவருக்கும் கடந்த வாரம் கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரைஅம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பெண் வீட்டின் சார்பில் அவரது அக்கா, மாமா எனக்கூறி இருவரும், மதுரையைச் சேர்ந்த தரகர் பாலமுருகன் (வயது 45) என்று மூவர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணத்தை முடித்துவிட்டு பெண் தரகர் பாலமுருகன் திருமண கமிஷன் தொகையாக ரூ.1.50 இலட்சத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இதனையடுத்து, திருமணம் முடிந்த 2வது நாளில் காலை எழுந்து பார்த்தபோது சந்தியா திடீரென மாயமாகியுள்ளார். பல்வேறு பகுதிகளில் தேடியும் காணவில்லை. அவரது கையடக்க தொலைபேசியை தொடர்பு கொண்ட போது செயலிழந்துள்ளது. அவரது உறவினர்கள், தரகர் பாலமுருகன் கையடக்க தொலைபேசி எண்களும் செயலிழந்துள்ளன. வீட்டில் அலுமாரியில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து, தனபால் பரமத்தி வேலூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்ய மணமகளை தேடிய போது வேறு ஒரு தரகர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. உடனடியாக உஷாரான தனபால் மற்றும் உறவினர்கள் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த பெண் தரகர் தனலட்சுமியிடம் (வயது 45) பேசி உள்ளனர். மணமகனின் போட்டோவை தரகரிடம் கொடுத்துள்ளனர். அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்து உள்ளது என தொலைபேசி மூலமே முடிவு செய்துள்ளனர்.
திருமண நாளன்று திருச்செங்கோட்டிற்கு காரில் வந்த சந்தியாவையும்இ அவர் உடன் வந்த மூவரையும் தனபால் குடும்பத்தினர் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். இதில்இ பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. மதுரை சேர்ந்த இவர்கள் இதுவரை சந்தியாவுக்கு ஆறு திருமணம் செய்து வைத்துள்ளனர். தனபாலை அடுத்து ஏழாவதாக திருமணம் நடக்க இருந்த போது சிக்கிக் கொண்டது தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகுவார். இரவில் கணவன் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது சந்தியா உடைமைகளை எடுத்துக்கொண்டு தலை மறைவாகி விடுவார் என்ற அதிரவைக்கும் தகவல் கிடைத்துள்ளது. சந்தியாவை திருமணம் செய்து ஏமாந்தவர்கள் யார்? என்ற விவரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்