புரட்டாசி சனி வார உற்சவம் அனுஷ்டிப்பு
-யாழ் நிருபர்-
சனீஸ்வர பெருமானின் முக்கிய விரதங்களில் ஒன்றான இரண்டாவது புரட்டாசிச் சனி வார உற்சவம் இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இவ் உற்சவ கிரியைகளை முன்னிட்டு வண்ணயம்பதி ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் ஆலயத்திலும் சனீஸ்வரப் பெருமானின் உற்சவகிரியைகள் இடம்பெற்றன.
கருவறையில் அருள்பாலித்து விளங்கும் ஸ்ரீவேங்கட வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகிய தெய்வங்களுக்கும் நவக்கிரக தெய்வங்கள், சனிஸ்வரபெருமான் ஆகிய தெய்வங்களுக்கும் அபிஷேச ஆராதணைகள் என்பன இடம்பெற்று எம்பெருமான் சமேதராக கருடவாகன சேவையில் வீற்று உள்வீதியுடாக வீற்று அருள் பாலித்தனர்.
இவ் சனிஸ்வரவிரத உற்சவத்தினை ஆலய பிரதம குரு ரமணிஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர் நடாத்திவைத்தனர்.
இங்கு வருகைதந்த பக்தர்கள் விரத நேர்த்தியினை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் எள் எண்ணெய் சுட்டி எரித்தும் நவக்கிரகபகவானுக்கு அபிஷேசகம் அர்ச்சணைகள் செய்துதமது விரதத்தினை பூர்த்தி செய்தனர்.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்