இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 24 ஓட்டங்களைப் பெற்ற அவர் ரோஹித் சர்மாவை பின்தள்ளி இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 4,115 ஓட்டங்களுடன் முதலாவது இடத்திலும், 4,066 ஓட்டங்களைப் பெற்று விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் 4,050 ஓட்டங்களுடன் ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்