
இரண்டாம் மொழியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
-மூதூர் நிருபர்-
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச ஊழியர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாள 2ஆம் மொழி சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை தோப்பூர் -அல்ஹம்றா மத்திய கல்லூரியின் , கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2 ஆம் சிங்களப் பாட ஆசிரியர் ஜீப்ரி அலி சஜிரி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 80 அரச ஊழியர்கள் பாட நெறியை பூர்த்தி செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
இதன் போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அதிதிகளாக தர்கா டவுன் கல்வியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.ஹாரிஸ் மரைக்காயர்,2 ஆம் மொழி பாட விரிவுரையாளர் ஏ.ஜே.சஜிரி , முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளர்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,2 ஆம் மொழி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.












