இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி

விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி, இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஏ9 வீதி கொக்காவில் பகுதியில், வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

குறித்த சிரமதானப்பணியில், இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி ஜயரத்ன அமரசிங்க மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் ஏ.அழகக்கோண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்