-கிளிநொச்சி நிருபர்-
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமான இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது
மேலும், கனகாம்பிகை குளமும் தற்பொழுது வான் பாய்ந்த வண்ணம் உள்ளதுடன், கல்மடுகுளம் தனது கொள்ளளவை எட்டி வான்பாய ஆரம்பித்துள்ளது
எனவே இதனைக் கருத்தில் கொண்டு, குளத்தின் நீரேந்தும் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்



