இரட்டை கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை

இரத்தினபுரி – கஹவத்தை கொடக்கதென்ன பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு இன்று திங்கட்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் இரத்தினபுரி மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதுஇ குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தாய் மற்றும் மகள் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை தொடர்பிலேயே சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.