இரகசியமாக புதையல் தோண்டிய மூவர் கைது

அனுராதபுர மாவட்டத்தில் கல்கிரியாகம, உல்பத்தகம பிரதேசத்தில் இரகசியமாக புதையல் தோண்டிய மூவரை புதையல் தோண்டும் உபகரணங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கல்கிரியாகம, திபுல்தெனிய, கித்துல்ஹிதியாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 29-39 வயதுக்கு இடைப்பட்ட 3 பேரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷேத பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ், அதிகாரிகள் குழுவினால் நேற்று வெள்ளிக்கிழமை கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பதாகம பகுதியில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சோதனையின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் தண்ணீர் மோட்டார், கிரில் இயந்திரம் போன்ற புதையல் தோண்டும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்