இயற்கையான நஞ்சற்ற உணவுப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட விவேகானந்தபுரத்தில், இயற்கையான நஞ்சற்ற உணவுப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி, நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது .

இந்நிகழ்வில், போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் கலந்து கொண்டார்.

இதன் போது சுய தொழில் முயற்சியாளர்களால் தமக்கான நிரந்தர கடைத் தொகுதியை பெற்று தருமாறு தவிசாளரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டதுடன், அதனை வெகுவிரைவில் பெற்று கொடுக்க முயற்சிப்பதாக தவிசாளர் தெரிவித்தார்.