
இம்ரான் கானின் மருமகனுக்கு பிணை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர், அவருக்கு எதிராக பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனால் அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இம்ரான் கானை விடுவிக்க கோரி, கடந்த மே 9 அன்று அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பொருட்களை சூறையாடினர்.
இதனால், அவருடைய ஆதரவாளர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் பதிவாகின.
அவரை விடுவிக்க கோரி, பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும், அவரது கட்சியான தெஹிரிக் – இ – இன்சாப் சார்பில் நாடு தழுவிய மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மே 9 அன்று நடந்த வன்முறையின்போது, லாகூரில் மூத்த ராணுவ அதிகாரியின் வீடு மீது தாக்குதல் நடந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு ஒன்றில் இம்ரான் கானின் மருமகனான ஷெர்ஷா கானுக்கு, பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றம் இன்று பிணை வழங்கி உத்தரவிட்டது.
ஷெர்ஷாவின் சகோதரரான ஷாரெஜ் கானுக்கு இதே வழக்கில் நேற்று பிணை வழங்கியிருந்தது.
குறித்த இருவரையும், கடந்த ஆகஸ்டு 21-ஆம் திகதி லாகூர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
