
இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்வு
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டைவிட 38 சதவீதம் அதிகரித்து, 93,915 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அடிப்படையில் இந்தியா மற்றும் பிரித்தானியா முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது.
இந்தியாவிலிருந்து 18,220 பேர் வருகை தந்துள்ளதுடன், பிரித்தானியாவிலிருந்து 11 ஆயிரத்து 425 பேர் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், ரஷ்யாவிலிருந்து 8,705 பேர் வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் கடந்த 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு 816,191 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் அதிகமாகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.