இமயமலை ஏற சென்ற ரஷ்ய வீரர்கள் சடலமாக மீட்பு
நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி சென்ற ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முகாமில் இருந்து நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை பயணத்தை தொடங்கிய குறித்த வீரர்களின் தொடர்பாடல் கருவிகள் காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாயமான வீரர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அந்த ஐவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மலையின் 7 கிலோமீட்டர் உயரத்தில் உலங்குவானூர்தியின் உதவியுடன் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், மலையேற்ற வீரர்கள் ஐவரும் மலை சிகரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்