இன்ஸ்டா பயனர்களுக்கு முக்கிய வசதி அறிமுகம்
இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவருவதற்காக புது புது தகவல்களை வெளியிட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலி இன்ஸ்டாகிராம்.
உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பேர் இன்ஸ்டாகிரம் பயன்படுத்துகிறார்கள்.
அந்த அளவு ஸ்மார்ட் தொலைபேசிகள் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் செயலி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆரம்பத்தில் புகைப்படம் மட்டுமே பதிவிடும் செயலியாக இருந்த இன்ஸ்டா தனது பயனர்களைக் கவருவதற்காக புது புது தகவல்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், இன்ஸ்டாவில் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, இன்ஸ்டாகிராமில் பார்வை பதிவுகள் ஒப்ஷன் (Watch History) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டா பயனர்கள் தாங்கள் பார்த்த, ரீல்ஸ்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் அதற்கான ஆப்ஷன் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அறிமுகம் ஆகியிருக்கும் பார்வை பதிவுகள் ஒப்ஷன் பயனர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இன்ஸ்டா செயலியின் செட்டிங்ஸ் பக்கத்தில் உங்கள் செயல்பாடு (Your Activity) பகுதியில் இந்த ஒப்ஷன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
