இன்று நாட்டின் மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 100 மி.மீ.-க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 40–50 கி.மீ. வேகத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மத்திய மாகாணப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு காணப்படுவதால், பயணிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது.










