இன்றைய வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், காங்கேசன்துறை முதல் புத்தளம், காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
