இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 100 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.