இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
நாட்டில், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:12 மணியளவில் மாதம்பே, கொஹிலபொகுன, கைகாவல, நிலம்பே மற்றும் ஓந்தாச்சிமடம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் அடையும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்