இன்றைய வானிலை முன்னறிவித்தல்
நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும், புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்