இன்றைய ராசி பலன்
மேஷம்
விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்
கடினமான வேலையையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும் . தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கடகம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். போராடி வெற்றி பெற வேண்டிய நாள்.
கன்னி
கடந்த கால இனிய அனுபவங்களெல்லாம் நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள் . உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
துலாம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு
சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
மகரம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கும்பம்
மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பியபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
மீனம்
விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.