இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்

மேஷம்

சிறிய வியாபாரம் தொடங்க நல்ல காலம். பெண்களுக்கு உயர்வு தரும் நாள். கல்வியில் சாதனை பெறலாம். கலைத் துறையினருக்கு புகழ் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறந்த முடிவுகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம். வழக்குகள் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும் .உங்களது முயற்சிக்கு நல்ல பலன் வரும்.
தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். குடும்பம் மற்றும் உறவுகளில் நிம்மதி காணப்படும். பணியில் திடீர் மாற்றம் ஏற்படலாம். சில முடிவுகள் தாமதமாகும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். தம்பதிகள் வெளியூர் செல்லலாம். பூர்வீக சொத்து தொடர்பாக சிக்கல்கள் தீரும். நண்பர்களின் சந்திப்பு உண்டு. அவர்களால் மகிழ்வு கிடைக்கும். பணவரவு கைக்கு வரும். புதிய வாடிக்கையாளர்கள் சேரும். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

வாடிக்கையாளர் திருப்தி பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் நேர்மையை பாராட்டப்படும். நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். மாணவ மாணவிகள் தேர்வுக்கு தயார் செய்யும் புத்திசாலித்தனமான திட்டமிடல் தேவை. உடலில் கழுத்து, முதுகு வலி வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

கன்னி

குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்படையும். மிகவும் நெருங்கியவர்கள் உதவுவர். கணினியில் வேலை செய்வோர் கண் சோர்வுக்கு தீர்வு தேட வேண்டும். மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். அடிக்கடி எழுதிப் பார்ப்பது நல்லது. உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

துலாம்

புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்ப வருமானத்தை மிகுதிப்படுத்த பகுதி நேர வேலையையும் துவங்குவீர்கள். வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

இன்று முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். புரிந்து கொள்ளாமல் பிரிந்த நண்பர்கள் இனி கை கோர்ப்பர். சகோதர வழி உறவு மேம்படும். வியாபாரம் செழிப்பாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். தேகம் மினுமினுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

குடும்பத் தலைவிகள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பர். வியாபரிகளுக்கு வெளியூர் பயணம் ஏற்படும். வீட்டில் பெரியவர் உடல்நலத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு தோல் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

மகரம்

உத்யோகஸ்தர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பெண்பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும். அரசு ஏலங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

கும்பம்

மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு. அறுவை சிகிட்சையின்றி மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

பிரபலங்கள் நண்பராவர். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியர்களின் ஆசி கிட்டும். வேலைகள் தள்ளிப் போகும். உடலில் அசதி தோன்றும். வீட்டு உணவை உட்கொள்வது நல்லது. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்