இன்றைய மின் விநியோகத்தடை

இன்று புதன்கிழமை 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது.

‘ஏ’  முதல் ‘டபிள்யூ’ வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல்மாலை 5 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘சி சி’ வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலம் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.