இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 5.00 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு குறித்து 2025 பெப்ரவரி 12 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் – நிறைவேற்றப்படவுள்ளது. (அரசியலமைப்பின் 157வது பிரிவுக்கு அமைய, இப்பிரேரணையானது ஆதரவாக வாக்களிப்போரில் மூன்றில் இரண்டிற்கு குறையாதவாறு அங்கீகரிக்கப்படல் வேண்டும்)
பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.
