இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 07 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 325 ரூபாய் 69 சதமாக பதிவாகியுள்ளது.
