அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று புதன்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 317.78 முதல் ரூ.317.83 ஆகவும், விற்பனை விலை ரூ. 327.40 முதல் ரூ.327.54 ஆகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், வளைகுடா நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்த அதே வேளையில், வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக உயர்ந்துள்ளது.
