இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.321.70 இருந்து ரூ.322.17  ஆகவும் விற்பனை விலை ரூ.332.49 இருந்து ரூ.332.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.