இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ 311.42 இல் இருந்து ரூ 312.39 ஆகவும், ரூ 326.05 இல் இருந்து 327.07 ரூபாவாகவும் ஆகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் 313.72 ரூபாவிலிருந்து 312.26 ரூபாவாக குறைந்துள்ளதுடன், விற்பனை வீதமும் 326 ரூபாவிலிருந்து 324.50 ரூபாவாக குறைந்துள்ளது.

இருப்பினும், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ 312ல் இருந்து ரூ 314 ஆகவும், ரூ 323ல் இருந்து ரூ 325 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்