இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 31 சதம், விற்பனை பெறுமதி 305 ரூபாய் 85 சதம்.

