
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 67 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய் 17 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 322 ரூபாய் 77 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 323 ரூபாய் 17சதமாக காணப்பட்டது.

